Why Redefine?

உளவியல் ஆலோசனை என்றால் என்ன?

நாம் அனைவரும் அமைதியை விரும்புகிறோம். ஆனால், பல கசப்பான உணர்வுகளுடனும், கடந்தகால மனவடுக்களுடனும், உடைந்து போன உறவுகளுடனும், தீர்க்கப்படாத பிரச்சனைகளுடனும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். சில நேரங்களில் உண்மைகளை ஏற்றுக்கொள்ள முடியாமல் மறுப்பில் வாழ்கிறோம் அல்லது பிரச்சனைகளைத் தீர்க்காமல் குற்ற உணர்வுடன் காலத்தைக் கடத்தி, நிலைமை சீரழிந்த பிறகு செய்வதறியாது திகைக்கிறோம்/ தவிக்கிறோம். இந்நிலையில் நமது நம்பிக்கைக்கு உகந்த நண்பர்களையோ அல்லது புரிதல் கொண்ட சுற்றங்களையோ அணுகுகிறோம். பிரச்சனைகள் மிகவும் சிக்கலாக இருக்கும் பட்சத்தில் மற்றவர்களின் உதவியும் பயனற்று  போய்விடுகிறது.

இதற்கு என்ன தீர்வு?

பயிற்சி பெற்ற நிபுணரிடம் உளவியல் ஆலோசனைப் பெறுவது.

உளவியல் ஆலோசனை என்பது பயிற்சி பெற்ற ஆலோசகர் ஒருவரால் வழங்கப்படும் தொழில்முறை உளவியல் சேவை. ஒரு நபர் பிறருடன் பகிர முடியாத எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் அனுபவங்களை பாதுகாப்பான, ரகசியமான, ஆதரவான சூழலில் பகிர்ந்து உதவிப் பெறுவது.

எங்களிடம் ஏன் ஆலோசனைப் பெறவேண்டும்?

வாழ்க்கையில் மன அழுத்தங்களையும், சவால்களையும் திறம்பட கையாள உங்களுக்கு பயிற்சிப் பெற்ற, அனுபவமிக்க ஆலோசகர்களின் உதவி தேவை –  இதை நாங்கள் வழங்குகிறோம்..

அறிவியல் சார்ந்த, சான்றுகள் அடிப்படையிலான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இழப்பு, பதற்றம், மனச்சோர்வு, உறவுகளில் சிக்கல் போன்ற பிரச்சனைகளைப் பற்றி பேசி, தெளிவுப் பெற்று, சாத்தியமான தீர்வுகளை அடையாளம் கண்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல உங்களுடன் துணை நிற்கிறோம்.

உங்களைப் புரிந்துக் கொள்ளவும், நம்பிக்கையை வளர்க்கவும், மனநலத்தை மேம்படுத்தவும் உதவுகிறோம்.

நாங்கள் குறிப்பாக மாணவர்களுக்கும், வளரிளம் பருவத்தினருக்கும் (adolescent) ஆலோசனை வழங்குகிறோம்.

  • அவர்களின் குழப்பங்களுக்கு விடையளிக்கிறோம்
  • உணர்வுகளை சீரமைக்க உதவுகிறோம்
  • பள்ளி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, சவால்களை நேர்மறையாக எதிர் கொள்ள வழி காட்டுகிறோம்
  • அவர்களுடைய நம்பிக்கையை வளர்த்து சரியான இலக்கை நோக்கி அழைத்துச் செல்கிறோம்

“உதவியை நாடுவது துணிச்சலான முதல் படி” – நாங்கள் உங்களுடன் கை கோர்க்கிறோம் – சேர்ந்து பயணிக்கிறோம்.

What Is Psychological Counselling?

We all desire peace. Yet many of us live with painful emotions, unresolved wounds from the past, broken relationships, and unsolved problems. At times, we are unable to accept reality and live in denial, or we carry guilt without resolving issues, letting time pass until the situation worsens and we feel lost or distressed, not knowing what to do.

In such moments, we turn to trusted friends or understanding social circles. However, when problems become very complex, even others’ support may no longer be helpful.

So, what is the solution?

Seeking psychological counselling from a trained professional.

Psychological counselling is a professional mental health service provided by a trained counsellor. It offers individuals a safe, confidential, and supportive space to share thoughts, feelings, and experiences that they may not be able to share with others, and to receive guidance and support.

Why should you seek counselling with us?

To effectively manage life’s stresses and challenges, you need the support of trained and experienced counsellors — and that is what we offer.

We provide scientific, evidence-based psychological counselling.

We stand by you as you talk about concerns such as grief, anxiety, depression, and relationship difficulties, helping you gain clarity, identify possible solutions, and move forward in life.

We help you understand yourself better, build trust, and improve your mental well-being.

We also offer specialised counselling for students and adolescents.

  • We help address their confusions and questions
  • We support them in regulating and understanding their emotions
  • We guide them in facing school-related problems and challenges in a positive way
  • We help build their confidence and lead them towards meaningful goals

“Seeking help is a courageous first step.”
We walk hand in hand with you — journeying together.